தற்போதைய செய்திகள்

திரிணமூலில் இணைந்த முகுல் ராயின் ‘இசட்’ பாதுகாப்பு வாபஸ்

ANI

திரிணமூல் காங்கிரஸில் இணைந்த பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராயின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி முன்னிலையில் கடந்த வாரம் இணைந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் சிபிஆர்எஃப் வீரர்களால் வழங்கப்பட்டு வந்த ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை இன்று மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும், மாநில அரசின் காவல்துறையால் முகுல் ராயிக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT