முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இன்று 5 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 17 ஜூன், 2021 at 1:29 PM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இன்று 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தில்,

பால்கர் மாவட்டத்தின் தஹானு என்ற பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலை ஒன்றில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது.

Advertisement

தகவலறிந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.