ஆந்திரத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு 
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு

ஆந்திரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது.

ANI

ஆந்திரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் ஆந்திரத்தில் மே 5ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதையொட்டி, தளர்வுகள் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ஆலோசனைக்கு பிறகு கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தளர்வுகள்:

ஆந்திரத்தில் காலை 6 மணிமுதல் மாலை 5 வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை இரவுநேர பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கிழக்கு கோத்தாவரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் அந்த மாவட்டத்தில் மட்டும் கடை திறக்கும் நேரத்தை காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை குறைத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT