முகுல் ராய் 
தற்போதைய செய்திகள்

திரிணமூலில் இணைந்த பாஜக எம்எல்ஏ முகுல் ராய்: தகுதி நீக்கம் செய்ய மனு அளிப்பு

பாஜகவிலிருந்து விலகிய எம்.எல்.ஏ. முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவரிடம் பாஜக பேரவைத் தலைவர் சுவேந்து அதிகாரி இன்று மனு அளித்தார்.

ANI

பாஜகவிலிருந்து விலகிய எம்.எல்.ஏ. முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவரிடம் பாஜக பேரவைத் தலைவர் சுவேந்து அதிகாரி இன்று மனு அளித்தார்.

கடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி முன்னிலையில் கடந்த வாரம் இணைந்தார் முகுல் ராய்.

இந்நிலையில், முகுல் ராயை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிடுமாறு பேரவைத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மனு அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT