முகப்பு
தற்போதைய செய்திகள்

பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்தியது தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்த மாநில அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

Updated On : 19 ஜூன், 2021 at 4:19 PM
கோப்புப்படம்
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்த மாநில அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை அடுத்து தெலங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பொதுமுடக்கமானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தளர்வுகள் குறித்து ஆலோசிக்க மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது.

Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொற்றின் பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்த நிலையில், நாளை காலை 6 மணிமுதல் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளைமுதல் தெலங்கானா மாநிலம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.