தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி போட்டுகொண்டார் ஒடிசா முதல்வர்

ANI


ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று போட்டுக் கொண்டார்.

இதற்குமுன், பிரதமர் மோடி இன்று காலை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT