தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள்

DIN

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் பேர் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா காரணமாக இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 6,26,74,446 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,08,38,473; பெண் வாக்காளர்கள் 3,18,28,727 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 12.91 லட்சம் பேர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சத்யபிரதா சாஹு கூறியதாவது,

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் பேர் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,253 வாக்காளர்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை திருமணம் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் தகவல்

ஸ்ரீரங்கம் கோயிலில் மோகன் பாகவத் சுவாமி தரிசனம்

பேராவூரணி அருகே கடலுக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

புதிய அன்னுகுடி பாசன வாய்க்கால் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

ஒரத்தநாட்டில் காவல் துறை சாா்பில் மகளிருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT