அமமுக கூட்டணியில் இரு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
அமமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தற்போதைய செய்திகள்அமமுக கூட்டணியில் இரு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
அமமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமமுகவுடன் மருது சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் மருது சேனை சங்கம், கோகுல மக்கள் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.