முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

எடப்பாடியில் அதிமுக மண்ணைக் கவ்வும்: விஜய பிரபாகரன்

எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள்

எடப்பாடியில் அதிமுக மண்ணைக் கவ்வும்: விஜய பிரபாகரன்

எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
கோப்புப்படம்
பகிர்:

எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக இன்று மதியம் அறிவித்தனர்.இதுகுறித்து பன்ருட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன் கூறியதாவது,

அதிமுகவின் தலைமை சரியில்லை, அவர்களுக்குதான் இனி இறங்கு முகம். தலையே போனாலும், தேமுதிக தன்மானத்தை இழக்காது. நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதி உள்பட ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக மண்ணைக் கவ்வும் எனத் தெரிவித்தார்.

குகையில் இருக்கும் சிங்கம் வெளியே வருகின்றது, இனி வேட்டை தான். சாணக்கியனாக இருந்தது போதும், இனி சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 99 சதவீதம் தனித்து தான் தேமுதிக போட்டியிடும் எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →