முகப்பு
தற்போதைய செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா

சிகிச்சைக்கு பிறகு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா
பகிர்:

சிகிச்சைக்கு பிறகு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

கடந்த புதன்கிழமை நந்திகிராமில் உள்ள துர்கா கோயிலில் வழிபட்ட பின் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தள்ளிவிட்டதாக  மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இதில், கால் பகுதியில் பலத்த காயமடைந்த மம்தா கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மாலை மருத்துவமனை தரப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

முதல்வர் மம்தா பானர்ஜி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்தார். அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால், பொருத்தமான அறிவுறுத்தல்களுடன் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். 7 நாட்களுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →