மேற்குவங்கம்: காங். நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
மேற்குவங்க தேர்தலின் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குவங்க தேர்தலின் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் 30 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளதரி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கமல்நாத், மல்லிகார்ஜுன் கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.