அசாம், மேற்குவங்க முதல்கட்ட தேர்தல்: மாலை 6 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் 
தற்போதைய செய்திகள்

அசாம், மேற்குவங்க முதல்கட்ட தேர்தல்: மாலை 6 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி வரையிலான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளன.

ANI

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி வரையிலான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 30 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மாலை 6 நிலவரப்படி மேற்குவங்கத்தில் 79.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதேபோல் அசாமில் 123 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி நிலவரப்படி 72.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் சில மணிநிமிடங்கள் வாக்குப்பதிவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT