கரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் சிறப்பு ரயில்களை மே 6ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் சிறப்பு ரயில்கள் சிலவற்றை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தில்,
பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் தினசரி சிறப்பு ரயில்கள் மே 6 முதல் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
புறப்படும் நேரம் | ரயில் எண் | புறப்படும் இடம் | சேரும் இடம் |
காலை 7.05 | 02627 | திருச்சி | திருவனந்தபுரம் |
காலை 11.35 | 02628 | திருவனந்தபுரம் | திருச்சி |
காலை 6.20 | 06607 | கண்ணூர் | கோவை |
காலை 2.20 | 06608 | கோவை | கண்ணூர் |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.