தற்போதைய செய்திகள்

சென்னை புறநகர் ரயிலில் நாளைமுதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

DIN

சென்னை புறநகர் ரயிலில் நாளைமுதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாட்டில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: இங்கே கிளிக் செய்யவும்...

இதையடுத்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில் நாளை முதல் மே 20ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை.

மேலும், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT