முகப்பு
தற்போதைய செய்திகள்

சண்டீகரில் வார இறுதி நாள்கள் ஊரடங்கு அறிவிப்பு

பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 7 மே, 2021 at 3:58 PM
கோப்புப்படம்
பகிர்:


பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை காலை 5 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகள் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கரோனா 2-வது அலை அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.