முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: ஆணையாம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் அருள் உயிரிழப்பு

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆணையாம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் அருள் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
அருள்
பகிர்:



தம்மம்பட்டி: கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆணையாம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் அருள் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், ஆணையாம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் அருள் (58). இவர் கெங்கவல்லி வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர். இவரது ஒரே மகனின் திருமணம் ஏப்ரல் இறுதியில் நடைபெற்றது.

அதன் பிறகு ஏப்.28 ஆம் தேதி அருளுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆத்தூர், சேலம் ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வெள்ளிக்கிழமை  இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவரது கெங்கவல்லி அடுத்த ஆணையாம்பட்டி வெள்ளிக்கிழமை இரவே தகனம் செய்யப்பட்டது. கெங்கவல்லியில் அவரது படத்திற்கு சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →