தற்போதைய செய்திகள்

கடலோர கிராமங்களிலிருந்து 12,420 பேர் வெளியேற்றம்: மகாராஷ்டிர முதல்வர்

ANI

டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மகாராஷ்டிர கிராமங்களிலிருந்து 12,420 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் (டவ்-தே) இன்று 17.5.2021 காலை 5.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தற்போது டையூவிலிருந்து 160 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல்  பகுதியிலிருந்து 140 திசையில் நகர்ந்து இன்று மாலை/இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பல இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும், பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

ராய்காட் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கையும், தானே, பால்கர் மற்றும் மும்பை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலோர கிராமங்களில் வசிக்கும் 12,420 பேரை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT