கரோனா ஆய்வு: முதல்வரின் 2 நாள்கள் பயண விவரம்
கரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயண விவரம் வெளியாகியுள்ளது.
கரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயண விவரம் வெளியாகியுள்ளது.
சேலம், கோவை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் கரோனா நிலவரம் குறித்து நாளை(மே 20) மற்றும் நாளை மறுநாள்(மே 21) முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னையிலிருந்து நாளை காலை 8.30 மணியளவில் விமானம் மூலம் புறப்படும் முதல்வர் 9.15 மணியளவில் சேலம் சென்றடைகிறார். காலை 10 மணிக்கு சேலம் இரும்பு உருக்காலையில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.
அங்கிருந்து புறப்படும் முதல்வர் பிற்பகல் 12.15 மணியளவில் பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி தொழிற்பேட்டையில் தடுப்பூசி பணிகளை துவங்கி வைக்கிறார். அதன்பின், கோவைக்கு பிற்பகல் 1.30 மணியளவில் சென்றடைகிறார்.
மாலை 5.15 மணிக்கு கொடிசியாவிலும், மாலை 6 மணிக்கு குமரகுரு கல்லூரியிலும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.
பின்பு அங்கிருந்து இரவு 7.30 மணியளவில் விமானம் மூலம் புறப்படும் முதல்வர் இரவு 8.30 மணியளவில் மதுரை சென்றடைகிறார்.
நாளை இரவு மதுரையில் ஓய்வெடுக்கும் முதல்வர், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின், காலை 11 மணியளவில் தோப்பூர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வுக்கு பின் அங்கிருந்து திருச்சிக்கு புறப்படுகிறார்.
பின், மாலை 5.10 மணிக்கு திருச்சி எம்.சி.மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறார். அங்கிருந்து கிளம்பி 5.45 மணியளவில் என்.ஐ.டி. சென்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறவுள்ளார்.
ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு மாலை 6.15 மணியளவில் திருச்சி விமான நிலையம் செல்லும் முதல்வர், அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.
அதன்பின், இரவு 7.30 மணிக்கு திருச்சியிலிருந்து விமானம் மூலம் கிளம்பி சென்னைக்கு இரவு 8.15 மணியளவில் வந்தடைகிறார்.