தற்போதைய செய்திகள்

யாஸ் புயல் எதிரொலி: ஒடிசாவில் தடுப்பூசி, கரோனா பரிசோதனை நிறுத்தம்

DIN

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் தடுப்பூசி போடும் பணி, கரோனா பரிசோதனைகள் ஆகியவற்றை மூன்று நாள்களுக்கு மாநில சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு வங்க கடலில் இன்று காலை வலுப்பெற்றுள்ள யாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து, வரும் 26ஆம் தேதி பிற்பகல் பாரதீப்-சாகர் தீவுக்கு இடையே கடக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நாளை முதல் மே 27ஆம் தேதி வரை பாலசூர், பத்ராக், கேந்திரபாரா, ஜகத்சிங்க்பூர், மயூர்பஞ்ச் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி, வீடு வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு போன்ற பணிகள் நடைபெறாது.

கேந்திரபாரா, ஜகத்சிங்க்பூர் மற்றும் கியோன்ஜார் மாவட்டங்களில் புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT