தற்போதைய செய்திகள்

விளைபொருள்களை சந்தைபடுத்த விவசாயிகளுக்கு உதவி எண்கள்

DIN

விவசாயிகள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களை சந்தைப்படுத்திட அல்லது அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல தேவையான அனுமதி பெற உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்பிற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இ-வணிக நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் தினமும் 2000 வாகனங்கள் மூலம் 1,500 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்களும், இதர மாவட்டங்களில் சுமார் 5,000
வாகனங்கள் மூலம் 3,500 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்களும் ஆக மொத்தம் 7,000 வாகனங்கள் மூலம் சுமார் 5,000 மெ.டன்கள் விநியோகம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை ஆங்காங்கே விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விவசாயிகள், விவசாய ஆர்வலர் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய தேவையான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகளால் கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் நகரின் இதர பகுதிகளில் விற்பனை செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியானவற்றை ஒரு இடத்திலிருந்து சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், ஆங்காங்கே எடுத்து செல்லவும் தமிழக அரசு தேவையான அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, விவசாய பெருமக்கள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்திட அல்லது அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல தேவையான அனுமதி பெறவும் மற்றும் உள்ளீடு ஏற்பாடுகள் செய்யவும் அந்தந்த மாவட்ட வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர்கள், தோட்டக்கலைத்துறை இணை/துணை இயக்குநர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறைகளின் தலைமையிடத்தில் இயங்கி வரும் கீழ்க்கண்ட
தொலைபேசி எண்கள் மூலமாகவும் தகவல் மற்றும் உதவிகள் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேளாண் விற்பனைத்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 044-22253884
தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டு அறை எண்: 1800 425 4444
வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 044-28594338

மாவட்டங்களில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை எண்கள்: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT