முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பை சரக்கு கப்பல் விபத்து: 71 உடல்கள் மீட்பு

டவ்-தே புயலில் சிக்கி அரபிக் கடலில் பி305 சிறுரக சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த 71 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:

மும்பை:  டவ்-தே புயலில் சிக்கி அரபிக் கடலில் பி305 சிறுரக சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த 71 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசியின் பி305 எனும் சரக்கு கப்பல் 261 பணியாளர்களுடன் மும்பை பிரதான எண்ணெய் வயல் பகுதியான ஹீரா எண்ணெய் வயல்களிலிருந்து மே 17ஆம் தேதி கிளம்பிச் சென்றபோது  புயலில் சிக்கி கடலில் மூழ்கியது.

தகவலறிந்து உடனடியாக வந்த கடற்படையினர் 186 பேரை மீட்டனர். மேலும், காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், காணாமல் போனவர்களின் 71 உடல்களை மீட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.