தற்போதைய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் வெற்றியடைய வேண்டும்: கமல்ஹாசன்

DIN

தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறி, போராட்டம் வெற்றி பெற வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை கடந்துள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருள்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. 

இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இந்த போராட்டம் 6 மாதங்களை நிறைவுசெய்வதைக் குறிக்கும் வகையில் இன்று கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிஸான் மோர்ச்சா சங்கம் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT