மம்தாவின் தலைமை ஆலோசகராக அலபன் பந்தோபாத்யாய நியமனம்
மத்திய பணிக்கு மாற்றப்பட்ட மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய, முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பணிக்கு மாற்றப்பட்ட மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய, முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய மத்திய பணிக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில், கரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அலபன் பந்தோபாத்யாயவை தனது தலைமை ஆலோசகராக நியமனம் செய்து தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மேற்கு வங்கத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஹெச்.கே.திவேதி, உள்துறை செயலாளராக கோபாலிகா ஆகியோரையும் முதல்வர் மம்தா பானர்ஜி நியமனம் செய்துள்ளார்.
கரோனா அதிகரித்து வரும் நிலையில், புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையொட்டி தில்லி உள்துறை அமைச்சகத்தில் அலபன் பந்தோபாத்யாய ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.