முகப்பு
நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளர்கள்.
தற்போதைய செய்திகள்

நீடாமங்கலத்தில் 10.30 மணி நிலவரப்படி 34.82% வாக்குகள் பதிவு

நீடாமங்கலம் பேரூராட்சியின் 15 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் வாக்குப்பதிவுகள்  இன்று 19 ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு  அமைதியாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய செய்திகள்

நீடாமங்கலத்தில் 10.30 மணி நிலவரப்படி 34.82% வாக்குகள் பதிவு

நீடாமங்கலம் பேரூராட்சியின் 15 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் வாக்குப்பதிவுகள்  இன்று 19 ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு  அமைதியாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளர்கள்.
பகிர்:

நீடாமங்கலம் பேரூராட்சியின் 15 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் வாக்குப்பதிவுகள்  இன்று 19 ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு  அமைதியாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  நீடாமங்கலம் பேரூராட்சியின் 15 வார்டுகளின் உறுப்பினர்கள் பதவிக்கு அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட 56 பேர் போட்டியிடுகின்றனர்.

15 வார்டு உறுப்பினர்களையும் 7 ஆயிரத்து 968 பேர் வாக்களித்து தேர்ந்தெடுக்கவுள்ளனர். நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசுஉயர்நிலைப்பள்ளி, செயின்ட்ஜூட்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி, நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இயங்கும் 15 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நீடாமங்கலம் இலக்குமிவிலாச நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையத்தில்  முன்னாள் பேரூராட்சி தலைவர் திமுக நகர செயலாளர் ராஜசேகரன் வாக்களித்தார். அவரது மகனும் பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளருமான ஆர்.ஆர்.ராம்ராஜ் அதே பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.


பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர், அதிமுக பரிமளா செந்தமிழ்ச்செல்வன் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

காலை 10.30 மணிவரை 34.82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் 22 ம்தேதி கோவில்வெண்ணி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் 15 வார்டுகளில் திமுக வேட்பாளர்களாக 12 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஒருவரும், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஒருவரும் மொத்தம் 15 பேர் திமுக அணியில் களத்தில் உள்ளனர். அதிமுக சார்பில் 14 வார்டுகளிலும் 14 பேரும், அதிமுக ஆதரவு சுயேச்சை ஒருவரும் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர அமமுக, நாம்தமிழர்கட்சி, பாஜக, சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் அமைதியாக தொடங்கி சூடாக முடிந்துள்ளது. திமுக ,அதிமுக அணியினருக்கு மட்டுமே தேர்தல் களத்தில் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வாக்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →