முகப்பு
தற்போதைய செய்திகள்

போடியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் முதியவர்கள்

போடியில் சனிக்கிழமை பிற்பகலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதியவர்கள் வாக்களித்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

போடியில் சனிக்கிழமை பிற்பகலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதியவர்கள் வாக்களித்தனர்.

போடி பகுதியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போடி நகராட்சியில் காலை 11 மணி நிலவரப்படி 25.64 சதவீதமும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.98 சதவீதமும் வாக்குப்பதிவாகியிருந்தது.

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 46.20 சதவீதமும் வாக்குப்பதிவாகியிருந்தது.

போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில்  பிற்பகல் 1 மணி நிலவரப்படி 63.86 சதவீதமும் வாக்குப்பதிவாகியிருந்தது.

போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் 13 வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரம்  வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வேறு இயந்திரம் பயன்படுத்தப்ட்டது.

போடி பகுதியில் பிற்பகலில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் வெயிலை பொருட்படுத்தாமல் முதியவர்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →