தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 33% வாக்குகள் பதிவு

DIN

திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மணி நிலவரப்படி 33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், மாநகராட்சி பகுதியில் 27.81 சதவீத வாக்குகளும், நகராட்சி பகுதிகளில் 41.88 சதவீத வாக்குகளும், பேரூராட்சி பகுதிகளில் 42.38 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, பல்லடம், திருமுருகன்பூண்டி, உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில், காங்கயம் ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் 15 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணி அளவில் தொடங்கியது. இதில், 420 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் சார்பில் 1,920 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 1,299 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் வாக்குப்பதிவானது மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்தது. இதில், காலை 9 மணி நிலவரப்படி 7.76 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 16.01 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்த நிலையில், திருப்பூர் மாநகரில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 27.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

அதே வேளையில், 6 நகராட்சிகளில் 41.88 சதவீத வாக்குகளும், 15 பேரூராட்சிகளில் 43.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனிடையே, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.வினீத் அவிநாசி பேரூராட்சி திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைகக்ப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கிவரும் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT