முகப்பு
தற்போதைய செய்திகள்

எடப்பாடி நகராட்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11மணி நிலவரப்படி எடப்பாடி நகராட்சியில் 33.93 சதவீதமும்

தற்போதைய செய்திகள்

எடப்பாடி நகராட்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11மணி நிலவரப்படி எடப்பாடி நகராட்சியில் 33.93 சதவீதமும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

எடப்பாடி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11மணி நிலவரப்படி எடப்பாடி நகராட்சியில் 33.93 சதவீதமும், பூலாம்பட்டி பேரூராட்சியில் 43.68 சதவீதமும், கொங்கணாபுரம் பேரூராட்சியில் 41சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

தொடர்ந்து இப்பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தலையில் குள்ளாவும், நெற்றியில் திருநீரு பட்டையும், கழுத்தில் சிலுவை அணிந்து வித்தியாசமான தோற்றத்தில்  அப்பகுதியைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கந்தவேல் வாக்களிக்க வந்தார். 

அவர் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மதசார்பற்ற இந்திய ஜனநாயகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இவ்வாறு உடை அலங்காரம் செய்து வாக்களிக்க வந்ததாக அவர் தெரிவித்தார்

முழு கட்டுரையைப் படிக்க →