முகப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்: காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது

போதைப்பொருள் கடத்தியதாக தில்லி காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 2 மார்ச், 2022 at 6:03 PM
கோப்புப்படம்
பகிர்:

குருகிராம்: போதைப்பொருள் கடத்தியதாக தில்லி காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒடிசாவில் இருந்து மேவாட் வந்த ஒரு லாரியில், 44 சாக்கு மூட்டைகளில், தேங்காய்களுக்கு அடியில் போதைப்பொருள் வைக்கப்பட்டு இருந்தது.

லாரியில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக தில்லி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

Advertisement

சோதனையில், ஒடிசாவின் ராய்கதர் மாவட்டத்தில் இருந்து பல மாவட்டங்களுக்கு கஞ்சா கொண்டு செல்லப்படுவதை தில்லி காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக தில்லி காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.