காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் எம்.மகாலெட்சுமி யுவராஜ். 
தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரத்தின் மேயர் வேட்பாளராக எம்.மகாலெட்சுமி யுவராஜ் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த எம்.மகாலெட்சுமி யுவராஜூம், துணை மேயர் வேட்பாளராக

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த எம்.மகாலெட்சுமி யுவராஜூம், துணை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.குமரகுரநாதனும் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 36-வது வார்டு உறுப்பினர் வே.ஜானகிராமன் காலமானதை தொடர்ந்து 50 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளரான எம்.மகாலெட்சுமி யுவராஜ் கோயில் நகரமான காஞ்சிபுரத்தின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல 22-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரான ஆர்.குமரகுருநாதன் துணை மேயர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் துணை மேயர் வேட்பாளர் ஆர்.குமரகுருநாதன்.

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.மகாலெட்சுமி யுவராஜ்(36) பி.இ,எம்.பி.ஏ.முதுகலைப் பட்டம் பயின்றவர். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி அப்பணியிலிருந்து விலகி மாமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரது கணவர் யுவராஜ் திமுகவில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். 

துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஆர்.குமரகுருநாதன் காஞ்சிபுரத்தில் உணவகங்களை நடத்தி வரும் தொழிலதிபர். இருவரும் மேயர், துணை மேயர் வேட்பாளராக திமுக தலைமைக்கழகம் அறிவித்திருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT