தற்போதைய செய்திகள்

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக திமுக சுகுனசங்கரி போட்டியின்றி தேர்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட

DIN

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 18-வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்று கடந்த 2ஆம் தேதி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு 14-ஆவது வார்டு திமுக உறுப்பினர் சுகுன சங்கரி மற்றும் 5-வது வார்டு அதிமுக உறுப்பினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் அதிமுக வார்டு உறுப்பினர் தாக்கல் செய்த மனுவை வழிமொழிந்தும், முன்மொழிய ஆள் இல்லாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

மேலும் 14-வது வார்டு திமுக உறுப்பினர் சுகுன சங்கரி போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் உறுதி செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சுகுன சங்கரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மேலும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்து தலைவர் இருக்கையில் அமரவைத்து பாராட்டினர். பேரூராட்சி தலைவர் தமிழக முதல்வருக்கும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருக்கும், வாக்களித்த சக வார்டு உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறு திருத்தப்பட்டது!

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

SCROLL FOR NEXT