கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அந்தியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது .

DIN

பவானி: அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது .

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள், புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர். இதில், 13-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த எம்.பாண்டியம்மாள், பேரூராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவர் பதவியை ஒதுக்கி திமுக தலைமை அறிவித்தது. இதனால், திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இத்தகவலால் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் பாண்டியம்மாள் வியாழக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

அந்தியூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க 18 வார்டு உறுப்பினர்களும் வரவில்லை. உறுப்பினர்கள் ஒருவர்கூட வராததால் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறு திருத்தப்பட்டது!

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

SCROLL FOR NEXT