முகப்பு
தற்போதைய செய்திகள்

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் நகர்மன்றத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில் இதில் சோம்பட்டி நகராட்சிக்கு

Updated On : 4 மார்ச், 2022 at 1:52 PM
பகிர்:

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் நகர்மன்றத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில் இதில் சோம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 உறுப்பினர்களை கொண்டு மறைமுக தேர்தலில் நகர்மன்றத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  

இந்த மறைமுகத் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் 10வது வார்டு க.செல்விக்கு எதிராக மற்றுமொரு திமுக வேட்பாளர் 11வது வார்டு சகுந்தலா விருப்ப மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் திமுக அறிவித்த  10-ஆவது வார்டு செல்வி மறைமுகத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து தனது ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.