முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன்

மதுக்கொள்கை தொடர்பான வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

மதுக்கொள்கை தொடர்பான வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

தில்லி அரசின் கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கருதி சிபிஐ விசாரணைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் விகே சக்சேனா கடந்த ஆண்டு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, சிசோடியா உள்ளிட்ட பலா் மீது சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தது. 

மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ கடந்த ஆண்டு நவம்பா் 25 -ஆம் தேதி தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தது. 

இந்த நிலையில் இவ்வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதனிடையே சிபிஐயின் இந்த சம்மனால் கேஜ்ரிவாலின் போராட்டம் ஒருபோதும் நின்று விடாது என அக்கட்சியின் எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →