தற்போதைய செய்திகள்

நான் ஊழல்வாதி என்றால் உலகில் ஒருவரும் நேர்மையானவர்கள் இல்லை: தில்லி முதல்வர்

DIN

நான் ஊழல்வாதி என்றால் இந்த உலகத்தில் ஒருவரும் நேர்மையானவர்கள் இல்லை என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் சிபிஐ தரப்பிலிருந்து அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: பாஜக தலைவர்கள் நான் கைது செய்யப்படுவதை எதிர்பார்க்கிறார்கள். பாஜக மத்திய விசாரணை அமைப்புகளுக்கு என்னை கைது செய்யுமாறு கட்டளையிட்டால் அவர்களால் அதை மறுத்து செயல்பட முடியாது. ஊழலில் மூழ்கிய ஒருவரால் எப்படி மற்றொரு நபரை ஊழல்வாதி எனக் கூற முடியும். நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரவிந்த் கேஜரிவால் ஒரு திருடன் அல்லது ஊழல்வாதி என்று கூறினால், இந்த உலகத்தில் ஒருவர் கூட நேர்மையானவர்களாக இருக்க முடியாது. கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஆம் ஆத்மி குறி வைத்து தாக்கப்படுவது போல் மற்ற எந்த ஒரு கட்சியும் தாக்கப்பட்டதில்லை. அதற்கு காரணம், ஆம் ஆத்மி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதே ஆகும். ஏழ்மையைப் போக்குவது, தரமான கல்வி வழங்குவது போன்ற நம்பிக்கையை ஆம் ஆத்மி அளித்துள்ளது. அந்த நம்பிக்கையை பிரதமர் நசுக்க நினைக்கிறார்.  

குஜராத்தில் பாஜக 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக 12 ஆண்டுகள் இருந்துள்ளார். ஆனால், அந்த மாநிலத்தில் ஒரு பள்ளியில் கூட கல்வியின் தரம் மேம்படுத்தப்படவில்லை. ஆனால், 5 ஆண்டுகளில் தில்லியில் தரமான கல்வியை ஆம் ஆத்மி வழங்கியுள்ளது. பிரதமர் குஜராத்துக்கு சென்ற போது தற்காலிக வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. பாஜக ஆம் ஆத்மியை மிரட்டிப் பார்க்கிறது. அதனால் தான் ஆம் ஆத்மியின் தலைவர்களை பாஜக சிறைக்கு அனுப்புகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT