துபையில் குடியிருப்பு கட்டடத்தில் தீ: 16 பேர் பலி
துபையில் அல்ராஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்ராஸ்: துபையில் அல்ராஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபையில் அலராஸ் தேரா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்த குடியிருப்பு கட்டடத்தில் இந்தியர்கள் கனிசமான அளவில் வசித்து வந்தனர்.
குடியிருப்பு கட்டடத்தின் 4 ஆவது தளத்தில் இயங்கி வந்த சூப்பர் மார்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
Advertisement
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆண்கள், குடியிருப்பில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், பாகிஸ்தானிய உறவினர்கள் மற்றும் நைஜீரிய பெண் ஒருவர் என 16 பேர் பலியாகி உள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.
தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கட்டடத்தில் போதுமான போதுகாப்பு இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.