முகப்பு
தற்போதைய செய்திகள்

கான்வே, துபே அதிரடி: ஆர்சிபிக்கு 227 ரன்கள் இலக்கு

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 226 ரன்கள் எடுத்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
பகிர்:

சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மொத்தம் 30 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19 போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

சிஎஸ்கே அணியில் மாற்றங்கள்: மகாலாவிற்கு பதிலாக பதிரனா வந்துள்ளார். 

ஆர்சிபி அணியில் மாற்றங்கள்: அணியில் எந்த மாற்றங்களும் இல்லை. 

தொடக்க வீரரான ருதுராஜ் சொதப்பினாலும் டெவோன் கான்வே அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். துபே 27 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார். ரஹானே 37 ரன்களும் எடுத்தார். ராயுடு- 14 ரன்கள், மொயின் அலி- 18 ரன்கள், தோனி- 1 ரன்னும் எடுத்தார்கள். 

சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 226 /6 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில் சிராஜ், பர்னேல், வைஷக், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →