சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை பிறந்தநாளையொட்டி சேலத்தில் அவரது நினைவுச்சின்னத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2013ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு சங்ககிரி அருகே உள்ள ஈரோடு பிரிவு சாலையில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அதனையடுத்து அவரது பிறந்த நாளையொட்டி நினைவுச்சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு அரசு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மக்களவை உறுப்பினர்கள் நாமக்கல் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் எஸ்ஆர்.பார்த்திபன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) எ.தணிகாசலம், வட்டாட்சியர் எஸ்.பானுமதி, சங்ககிரி பேரூராட்சித்தலைவி மணிமொழிமுருகன், துணைத்தலைவர் இரா.வ.அருண்பிரபு, பேரூராட்சி செயல் அலுவலர் வ.சுலைமான்சேட், திமுக ஒன்றியச் செயலர் கே.எம்.ராஜேஷ், நகரச் செயலர் கே.எம்.முருகன், சங்ககிரி பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.