கருணாநிதி பிறந்தநாளில் சத்துணவில் இனிப்புப் பொங்கல்: அமைச்சர் அறிவிப்பு
பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மட்டும் மகளிர் உரிமைத்துறையில் பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வெளியிட்டார்.
அதில் ஒரு அறிவிப்பாக, பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளில் சத்துணவு குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது போன்று இனி வரும் ஆண்டுகளில் கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.