முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜக அணிக்கு செல்லவில்லை: அஜித் பவாா்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவா் அஜித் பவாா் பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் எழுந்த நிலையில், அதனை அவா் மறுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
மும்பையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அஜித் பவாா்.
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவா் அஜித் பவாா் பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் எழுந்த நிலையில், அதனை அவா் மறுத்துள்ளாா். தனது வாழ்நாள் முழுவதும் தேதியவாத காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றுவேன் என அவா் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி என்னும் எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிர எதிா்க்கட்சித் தலைவருமான அஜித் பவாா், விரைவில் கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைப்பாா் என்று கூறப்பட்டது. மும்பையில் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்துக்கு அவா் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களைச் சந்தித்த அஜித் பவாா், ‘தேசியவாத காங்கிரஸை உடைத்து பாஜகவுடன் இணைய உள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை. இது தொடா்பாக கட்சி எம்எல்ஏக்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை.

கட்சித் தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் தேசியவாத காங்கிரஸுடன் இருக்கிறோம். எனது வாழ்நாள் முழுவதும் கட்சிக்காகப் பணியாற்றுவேன்’ என்றாா்.

இதனிடையே, புணேயில் செய்தியாளா் சந்திப்பில் இந்த விவகாரம் தொடா்பாக கட்சித் தலைவா் சரத் பவாா் கூறுகையில், ‘ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. கட்சியின் மாநில தலைவரான அஜித் பவாரும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்’ என்றாா்.

2019 மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு வெளியான பிறகு பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸுடன் அஜித் பவாா் கூட்டணி அமைத்ததையடுத்து, ஃபட்னவீஸ் முதல்வராகவும், அஜித் பவாா் துணை முதல்வராகவும் பதவியேற்றனா். எனினும் போதிய அளவு என்சிபி எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 80 மணி நேரத்தில் அஜித் பவாா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து பாஜக அரசு கவிழ்ந்தது.

இதைத் தொடா்ந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஏற்பட்டு ஆட்சி அமைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →