கோப்புப் படம். 
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் கரோனா அதிகரிப்பு: மத்திய அரசு கடிதம்

கரோனா தொற்று அதிகரிப்பு தொடர்பாக தமிழ்நாடு, தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

DIN

கரோனா தொற்று அதிகரிப்பு தொடர்பாக தமிழ்நாடு, தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

அதில், கரோனா பரிசோதனையை இன்னும் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த வாரம் 4.7%ஆக இருந்த தினசரி பாதிப்பு, நடப்பு வாரத்தில் 5.5%ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு சுகாதாரத் துறையினா் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT