முகப்பு
தற்போதைய செய்திகள்

தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: அதிமுக

தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்  நிறைவேற்றப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டைமாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் ஆா் ஜி கே நந்தகோபால் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலரும், அரக்கோணம் எம்எல்ஏ வுமான சு. ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிப் பேசினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →