அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு! இபிஎஸ் அறிவிப்பு!
முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமம் ஒத்திவைப்பு.
சென்னையில் வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அதிமுக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற ஆக. 9 ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி ரீதியாகவும், சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாகவும் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் ஆலோசிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடமல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.