முகப்பு
தற்போதைய செய்திகள்

கோட் படத்தில் பாடும் விஜய்!

முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் பாட உள்ளார்.

Updated On : 10 மார்ச், 2024 at 7:48 AM
- DOTCOM
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலைப் பாட உள்ளதாகக் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் முதல் முறையாக விஜய் பாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.