உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் 70 வயது முதியவர் மீது கார் ஒன்று மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், குறுகிய தெருவில் ஒரு வெள்ளைநிற கார் பின்னோக்கிச் செல்கையில், ராஜேந்திர குப்தா எனும் நபர், காரின்கீழ் விழுகிறார். குப்தா இருப்பதை அறியாமல், ஓட்டுநர் வாகனத்தை பலமீட்டர் தூரம் பின்னோக்கி திருப்பிக் கொண்டிருக்கிறார்.
குப்தா காரின் அடியில் இழுத்துச் செல்லப்பட்டபோது வலியால் அலறியபோது, அருகிலுள்ள குடியிருப்போர், அலறல்கேட்டு அங்கு விரைந்தனர். பின் காரை முன்னோக்கி நகர்த்தி, குப்தாவை, மேலும் சில அடி தூரம் இழுத்துச் சென்றார். எஸ்யூவி கார் முதியவர் மீது இடித்ததால் பலத்த காயமடைந்தார்.
கார் ஓட்டுநர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லாமல், காயமடைந்தவருக்கு உதவுவதாகக் கூறி, அவர் தனது காரில் குப்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மேலும் முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.