தற்போதைய செய்திகள்

தாமதமாகும் ரீமெல் புயல்!

வங்கக்கடலில் உருவான ‘ரீமெல் ’ புயலாக மாறுவதில் தாமதமாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை காலை (மே 25) ‘ரீமெல் ’ புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதமாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து புயலாக சனிக்கிழமை (மே 25) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக் கூடும். மேலும் இது, வடக்கு திசையில் நகா்ந்து, தீவிரப் புயலாக வலுப்பெற்று ஞாயிற்றுக்கிழமை (மே 26) வங்கதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்கக் கடற்கரையை கரையை கடக்கக் கூடும்.

எனவே, தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .

ஞாயிற்றுக்கிழமை (மே 25) முதல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த ‘ரீமெல்’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT