கான்க்ளேவ் திரைப்படத்தின் போஸ்டர் 
தற்போதைய செய்திகள்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு ‘கான்க்ளேவ்’ படத்தின் பார்வையாளர்கள் அதிகரிப்பு!

'கான்க்ளேவ்' திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதைப் பற்றி...

DIN

போப் பிரான்சிஸ் மறைவால் ‘கான்க்ளேவ்’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது.

வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், ஏப். 21 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு வரும் ஏப்.26 அன்று புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்று பின்னர் அவரது உடல் புனித மேரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸின் மரணத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அடுத்த எழுந்துள்ளது.

முன்னதாக, கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை மிகவும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் மேற்கொள்ளப்படும் என்பது உலகம் அறிந்த ஒன்று. ஆனால், அந்த ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக உருவான ஒரு திரைப்படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

‘கான்க்ளேவ்’

கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரிய மரபுகளைப் பின்பற்றி போப் ஆண்டவரின் மரணத்திற்கு பிறகு அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை மையமாகக் கொண்டு ராபர்ட் ஹாரிஸ் என்பவர் எழுதிய நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘கான்க்ளேவ்’.

கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. இந்நிலையில், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியான இந்தப் படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது விண்ணைத் தொட்டுள்ளது.

போப் பிரான்சிஸின் மரணத்திற்கு முந்தைய நாள் (ஏப்.20) வரை 18 லட்சம் நிமிடங்கள் காணப்பட்டிருந்த இந்தப் படம் ஏப்.21 அன்று இரவுக்குள் சுமார் 69 லட்சம் நிமிடங்கள் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது போப்பின் மரணத்திற்கு பின்னர் சுமார் 283 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தி டூ போப்ஸ் திரைப்படத்தின் போஸ்டர்

‘தி டூ போப்ஸ்’

இதேபோல், முன்னாள் வாடிகன் தலைவரான போப் பதினாறாம் பெனடிக்ட் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தி டூ போப்ஸ்’ எனும் திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை போப் பிரான்சிஸின் மறைவுக்கு பின்னர் சுமார் 417 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:போப் பிரான்சிஸ் மரணம்: இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT