முக்கியச் செய்திகள்

முன்னாள் நீதிபதி கர்ணனின் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ கொடி அறிமுகம்!

RKV

முன்னால் நீதிபதி கர்ணன் தனது கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியை’ தொடங்குவதாக கடந்த மாதம் கொல்கத்தாவில் அறிவித்தார். இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற விழாவில் தனது கட்சியின் கொடியை இன்று அவர் அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலை விரித்தாடும் ஊழலை ஒழிப்பதற்காகவே தான் கட்சி தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

‘சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மீது புகார் அளித்தேன். விசாரணைக்குச் சென்ற என் மீது... நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். ஆனாலும், மீண்டும் எனது புகாரை விசாரணைக்குக் கொண்டு வரவேண்டும். அதைப் பற்றிய விவாதங்களை பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பதற்காகவே நான் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன். பாராளுமன்றத்தில் எனது புகாரைப் பற்றிய விவாதத்தை எழுப்ப வேண்டுமானால் எம் பி க்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அதற்காகவும் தான் நான் இந்த அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளேன். என்னுடைய கட்சி காட்டாற்று வெள்ளம் போல வேகம் கொண்டது. எந்த அரசியல் கட்சி எங்களை எதிர்த்து நின்றாலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று பாரளுமன்றத்துக்குள் நுழைவோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ஆறுதல் தொகை அளிப்பதாக நான் அறிவித்திருந்தேன். அவர்களுக்கு 1, 30,000 ரூபாய் நான் தர வேண்டும். அதை நானே சென்று அவர்களிடம் அளிப்பேன். என முன்னாள் நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT