முக்கியச் செய்திகள்

நொய்டா மாணவி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணை கோரும் பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகராஜ்!

RKV

நொய்டா பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவர் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்க, பிரபல கதக் நடனக் கலைஞரும், இந்தியாவின் பெருமைக்குரிய நாட்டிய ஆசிரியர்களில் ஒருவருமான பண்டிட் பிர்ஜு மகராஜ், பள்ளித்தரப்பின் மீது திவிரமான சிபிஐ விசாரணை கோரி ஊடகங்களில் அறிவித்திருக்கிறார். நொய்டாவில் கடந்த வாரம் பள்ளித்தேர்வுத் தோல்விக்காக தற்கொலை செய்து கொண்டு இறந்த 9 ஆம் வகுப்புப் பள்ளி மாணவி ‘கதக்’ நாட்டியமாடுவதில் திறன் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவியின் பெற்றோர், தமது மகளின் மரணத்துக்குக் காரணமாக அப்பள்ளியின் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களின் மீது குற்றம் சாட்டியிருந்தனர். அவ்விரு ஆசிரியர்களும் பாலியல் ரீதியாகத் தமது மகளுக்குத் தொடர்ந்து தொந்திரவு அளித்து வந்ததோடு, அவளை வேண்டுமென்றே குறிப்பிட்ட பாடங்களில் தோல்வியுறுமாறு மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டுள்ளனர் என்றும் காவல்துறை விசாரணையில் தெரிவித்திருந்தனர்.

இதை மறுத்த பள்ளி நிர்வாகத் தரப்பு, பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ள அந்த இரு ஆசிரியர்களுள் ஒருவர் பெண், என்பதோடு சம்பந்தப்பட்ட இரு ஆசிரியர்களுமே தங்களது பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிபவர்கள், அவர்கள் மேல் இப்படியொரு குற்றச்சாட்டு இதுவரை வந்ததில்லை. என்பதால் பெற்றோரின் குற்றச்சாட்டு ஆதரமற்றது என்றும் கூறியிருந்தது. அதுமட்டுமல்ல, மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளவாறு அந்த மாணவி தேர்வில் தோல்வியுற்றவர் அல்ல என்றும் மாணவிக்கு தோல்வியுற்ற பாடங்களில் மீண்டும் தேர்வெழுதி வெல்ல மார்ச் 23 ஆம் தேதி நிர்மாணிக்கப்பட்டுருந்தது, அன்று தேர்வெழுதி இருந்தால் மாணவி தோல்வியடைந்தவராகக் கருத வாய்ப்பில்லை. அவர் மீண்டும் தேர்வில் வெற்றி பெற்று அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும். அப்படியிருக்க ஆசிரியர்களின் சதியால் தேர்வில் தோல்வியுற்று மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதை எங்களால் ஒப்புக் கொள்ள முடியாது என்றும் பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது.

இரு தரப்பு வாதங்களும் புகார்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு  காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறந்த கதக் நடனக் கலைஞரான அம்மாணவியின் இழப்பு கலைக்கு நேர்ந்த இழப்பாகக் கருதப்படும் என்பதற்கிணங்க பண்டிட் பிர்ஜூ மகராஜ் தற்போது இவ்விவகாரத்தில் பெற்றோர் சார்பாக, பள்ளித்தரப்பின் அலட்சியத்தை சுட்டிக் காட்டி தமது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர், பள்ளி நிர்வாகம் முன்பே மாணவிக்கு தேர்வுத் தோல்வி குறித்து கவுன்சிலிங் அளித்து தேற்றியிருக்க வேண்டும். கால தாமதத்தாலும், மாணவர்களின் உணர்வுகள் மீதான அலட்சியத்தாலும் இன்று அருமையான நடனக் கலைஞரான ஒரு சிறுமியை இன்று இழந்து விட்டோம். ஆகவே, பள்ளித்தரப்பு மீதான குற்றத்தை தெளிவாக விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என மாணவியின் பெற்றோர் சார்பாக பிர்ஜூ மகராஜ் குரல் கொடுத்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT