முக்கியச் செய்திகள்

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது வலிமை அப்டேட்

DIN

வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் திரைப்படம் வலிமை. இருப்பினும் கடந்த சில மாதங்களாக ’வலிமை’ படத்தின் எந்த ஒரு அடுத்தகட்ட அறிவிப்பும் வராததால் ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

இதன் காரணமாக பல்வேறு பொது இடங்களிலும் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்தனர். இறுதியாக கடந்த வாரம் படத்தின் இயக்குனர் எச்.வினோத் ஜுலை 15 அன்று ‘ வலிமை’ படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அறிவித்திருந்தார்.

தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் ( motion poster ) இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கும் காத்திருப்பிற்கும் பின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு வலிமை அப்டேட் வெளியாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT