முதன்மைச் செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் இங்கே.. தினமணி.காம்-உடன் இணைந்திருங்கள்.
2023 ஜனவரியில் இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் டி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. டி பிரிவில் இந்தியா, வேல்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தபிரபல இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் பூபேன் ஹஸாரிகாவின் 96 ஆவது பிறந்தநாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.
யு.எஸ். ஓபன் போட்டியில் நடாலை வீழ்த்திய அமெரிக்க வீரரான டியாஃபோ தற்போது காலிறுதியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தும்கா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவியபோது, எங்கே சென்றிருந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் அநாகரீகமாக பதிலளித்திருந்தார்.
நீட் தேர்வில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா். செய்தியை மேலும் படிக்க..
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான பிறகு முதல்முறையாக தலைமை அலுவலகம் வந்தார் எடப்பாடி பழனிசாமி.
72 நாள்களுக்குப் பிறகு அதிமுக அலுவலகம் வந்தார் எடப்பாடி பழனிசாமி
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.
மின்துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
அதிமுக அலுவலகத்திற்குள் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்க கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகம் செல்கிறார்.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6,395 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் அதிகாலை அரசு பேருந்து ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதால் பேருந்தை நிறுத்தி ஊழியர்கள் ஒரு மணி நேரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியிலிருந்து இரண்டாவது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 5ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் ஒப்பணக்காரர் வீதியில் உள்ள கடைகளில் பர்செசிங் செய்து விட்டு ஓலா செயலில் ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளனர்.
இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார், அதன் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டின் மாடல்களை வெளியிட்டு சந்தையில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலுகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் செல்ல ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் 144 தடை உத்தரவானது, வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை சுமார் இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் நடந்த இசைக் கச்சேரியின்போது, பார்வதி வேடமணிந்தபடி, சிவ ருத்ர நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர் ஒருவர் மேடையிலேயே சரிந்து பலியானார்.
சண்டிகர் மாநிலத்தில் 20 வயது இளைஞர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதில் ராணுவ வீரர் உள்பட பலருக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.
நடப்பாண்டில் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா. உலகில் மொத்தம் விசா வழங்கப்பட்ட மாணவர்களில் 20% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவாகப் படிக்க...
தொடர்ந்து இரண்டு நாள்கள் கனமழை பெய்ததால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூருவில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும், பாதுகாப்புக் கருதி படகுகளை வாங்கி வைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அறிக்கை எப்போது தாக்கல் செய்ய முடியும் என 2 வாரத்தில் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சோந்தியை விட அதிக நிறம் மாறுவார் ஓபிஎஸ் என எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் சுற்றுலாவை மேம்படுத்த மணிமுத்தாறில் 7 கோடி ரூபாய் மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று களக்காட்டில் ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். மாநகர மக்களின் நலனுக்காக 370 கோடி ரூபாயில் மாநகர மேற்கு புறவழிச்சாலை மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும் என நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஓணம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விரிவாகப் படிக்க...
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எனது கோரிக்கைகளை ராகுல் காந்தி கவனமாக கேட்டுக் கொண்டார் என்று அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கூறியுள்ளார்.
மணப்பாறையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை, சக்கர நாற்காலியில் வைத்து 4 கி.மீ தொலைவில் உள்ள இடுகாடு வரை மகன் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியாய் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியான நிலையில், தேர்வில் தோல்வி அடைந்த திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இரண்டாவது நாள் நடைப்பயணத்தை ராகுல் காந்தி கொடியசைத்துத் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தின் இடையே, கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் மற்றும் தந்தை சண்முகம் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். மேலும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.